வத்திராயிருப்பு பகுதியில் மழை
வத்திராயிருப்பு பகுதியில் நேற்று மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே வரவே அச்சப்பட்டனர். இந்தநிலையில் நேற்று மதியம் திடீரென சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிச்சியான சூழ்நிலை நிலவியது. திடீரென பெய்த மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.