தொழிலாளி கொலையில் மேலும் 4 பேர் கைது

தொழிலாளி கொலையில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2021-09-17 19:25 GMT
நெல்லை:

நெல்லை அருகே உள்ள கீழச்செவல் நயினார்குளத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சங்கர சுப்பிரமணியன் (வயது 37). தொழிலாளியான இவர் கடந்த 13-ந் தேதி மர்ம கும்பலால் தலைதுண்டித்து கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவுப்படி சேரன்மாதேவி துணை சூப்பிரண்டு பார்த்தீபன் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி ஏற்கனவே 6 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில் கொத்தன்குளத்தை சேர்ந்த ராஜகோபால் மகன் ராஜகுரு (37), பச்சை பெருமாள் மகன்கள் விக்னேசுவரன் (28), சரவணகுமார் (29), வேலு மகன் மாரிமுத்து (28) ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

மேலும் செய்திகள்