மணல் அள்ளிய லாரி பறிமுதல்

காரியாபட்டி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-09-17 19:21 GMT
காரியாபட்டி, 
திருச்சுழி தாலுகா கிருஷ்ணாபுரம் குண்டாறு பகுதியில் இரவு நேரத்தில் அரசு அனுமதியின்றி லாரிகளில் மணல் அள்ளப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சுழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருக கணேசன் மற்றும் போலீசார் கிருஷ்ணாபுரம் அருகே குண்டாறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குண்டாற்றில் லாரியில் மணல் அள்ளிக் கொண்டு இருந்தனர். இதை கண்ட போலீசார் மணல் அள்ளும் இடத்திற்கு சென்றபோது போலீசார் வருவதை பார்த்த உடன் அங்கிருந்த நபர்கள் லாரியை விட்டு, விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் அனுமதியின்றி லாரியில் மணல் அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்