இளம்பெண் தற்கொலை

ஆலங்குளம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-09-17 19:11 GMT
ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே புதுப்பட்டி வடக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து. இவர் மும்பையில் தனியார் நிறுவனத்தில் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கண்ணகி (வயது 23) என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். 

இந்த நிலையில் உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக சுடலைமுத்து மும்பையில் இருந்து சொந்த ஊருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார். இதையடுத்து சுடலைமுத்துவுக்கும், கண்ணகிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த கண்ணகி வீட்டின் கதவை பூட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 
இதுகுறித்து உடனடியாக ஆலங்குளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கண்ணகிக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்