சூதாடிய 6 பேர் கைது
பாளையங்கோட்டையில் சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
பாளையங்கோட்டை தாலுகா போலீசார் கே.டி.சி. நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 6 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், அவர்கள் பாளையங்கோட்டை சாலையாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுந்தரம் (வயது 40), திம்மராஜபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் (44), டேனியல் ராஜ் (38), மேலப்பாளையத்தை சேர்ந்த நாகூர் மீரான், கோட்டூரை சேர்ந்த செந்தில் (34), ஆசாரிபள்ளத்தை சேர்ந்த ராமமூர்த்தி (48) ஆகிய 6 பேர் என்பதும், அவர்கள் அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.
உடனே போலீசார் 6 பேரையும் கைது செய்து, ரூ.30 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.