கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய 20 பேருக்கு இருசக்கர வாகனம்

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய 20 பேருக்கு இருசக்கர வாகனம்

Update: 2021-09-17 18:11 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட கிராமப்புற கல்வி வளர்ச்சி சங்கம் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி கொரோனா தடுப்பு நடவடிக்கையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சங்க உறுப்பினர்கள் மற்றும் கல்வி சார்ந்த சேவை செய்து வரும் சமூக ஆர்வலர்கள் என 20 பேருக்கு இருசக்கர மோட்டார் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. 

நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் கே.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் திராவிட வசந்தன், நிர்வாகக்குழு தலைவர் கிருஷ்ணன், நிர்வாக அலுவலர் ஜெயபிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் நாராயணன் வரவேற்றார். 

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி பங்கேற்று 20 பேருக்கு தலா ரூ.75 ஆயிரம் மதிப்பில் மொத்தம் ரூ.15 லட்சம் மதிப்பில் இருசக்கர மோட்டார் வாகனங்கள் வழங்கும் பணியை தொடங்கி வைத்து கிராமப்புறங்களில் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார். முடிவில் செயலாளர் தமிழன்பன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்