கல்வராயன்மலையில் 2750 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கல்வராயன்மலையில் 2750 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கச்சிராயப்பாளையம்
கல்வராயன்மலை அடிவாரம் மல்லிகைபாடி வனப்பகுதியில் மர்ம நபர்கள் சாராயம் காய்ச்சிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து கச்சிராயப்பாளையம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ஏழுமலை, தியாகதுருகம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் குணசேகரன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட போலீசார் மல்லிகைபாடி மற்றும் அதனை சுற்றியுள்ள வனப் பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது முட்டியூர் வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக 15 பேரல்களில் 2,750 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை தரையில் கொட்டி அழித்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவுசெய்து சாராய ஊறலை பதுக்கி வைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.