ஆழியாறு அணையில் இருந்து மீண்டும் உபரிநீர் திறப்பு
ஆழியாறு அணையில் இருந்து மீண்டும் உபரிநீர் திறந்து விடப்பட்டது.
பொள்ளாச்சி,
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பர் ஆழியாறு மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 12.45 மணி வரை 11 மதகுகள் வழியாக வினாடிக்கு 1800 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து நீர்வரத்து குறைந்ததால் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் நேற்று பகல் 12 மணிக்கு திடீரென்று அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வரை நீர்வந்தது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி 11 மதகுகள் வழியாக அந்த நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.
பின்னர் நீர்வரத்து குறைந்ததால் மதகுகள் வழியாக படிப்படியாக உபரிநீர் வெளியேற்றப்படுவதை குறைத்து முழுமையாக நிறுத்தப்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி பொள்ளாச்சி கால்வாய் வழியாக வினாடிக்கு 200 கன அடியும், வேட்டைக்காரன்புதூர் கால்வாய் வழியாக வினாடிக்கு 80 கன அடியும், மின் உற்பத்தி நிலையம் வழியாக வினாடிக்கு 275 கன அடியும் திறந்து விடப்பட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.