திருக்கோவிலூர் அருகே பஸ் மோதி தொழிலாளி பலி

திருக்கோவிலூர் அருகே பஸ் மோதி தொழிலாளி பலி;

Update: 2021-09-17 17:03 GMT
திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள மழவந்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 40). தொழிலாளியான இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் அய்யனார்(38) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலை-விழுப்புரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். மழவன்தாங்கள் கூட்டு ரோடு அருகே வந்தபோது அந்த வழியாக புதுச்சேரியில் இருந்து பெங்களூர் நோக்கி வந்த புதுச்சேரி மாநில அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அய்யனாரை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து குறித்து  கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்