திட்டக்குடி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

திட்டக்குடி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Update: 2021-09-17 16:59 GMT
திட்டக்குடி, 

பெரம்பலூர் மாவட்டம் ஓகளுர் கிராமத்தை சேர்ந்தவர் சடையாண்டி மகன் சின்னதுரை (வயது 40), தொழிலாளி. இவர் தற்போது கடலூர் மாவட்டம் திட்டக்குடி எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவரது மைத்துனர் தனது குழந்தையின் பிறந்த நாள் விழாவுக்கு சின்னதுரையை அழைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சின்னதுரை குடித்து விட்டு போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் அவர் வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டார். 

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே சின்னதுரை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திட்டக்குடி இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி, சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்