தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-09-17 16:29 GMT
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கழிவுநீருடன் கலக்கும் ஓடை தண்ணீர்
திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டி சாலை, கருப்பணசாமி கோவில் தெரு ஆகிய இடங்களில் மழைக்காலத்தில் ஓடை தண்ணீர் நிரம்பி வழிகிறது. அப்போது அங்குள்ள சாக்கடை கால்வாயிலும் ஓடைநீர் கலக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. ஓடை தண்ணீர் தெருவுக்குள் வராமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சூரியகலா, குடைப்பாறைப்பட்டி.
வேகத்தடை அமைக்க வேண்டும்
நிலக்கோட்டை அணைப்பட்டி ரோடு, சந்தை ரோடு ஆகியவற்றில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் சூழலும் உள்ளது. எனவே விபத்தை தவிர்க்க அந்த சாலைகளில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அமீர் இப்ராகிம், நிலக்கோட்டை.
குண்டும், குழியுமான சாலை
சாணார்பட்டி ஒன்றியம் வி.எஸ்.கோட்டை ஊராட்சி மார்க்கம்பட்டியில் இருந்து ஆவரம்பட்டிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இளையராஜா, வல்லம்பட்டி.
ரேஷன் கடை அமைக்கப்படுமா?
பழனி தாலுகா அ.கலையம்புத்தூர் ஊராட்சி ராஜாபுரத்தில் ரேஷன் கடை அமைக்கப்படவில்லை. இதனால் பக்கத்து ஊருக்கு சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வரும் நிலை உள்ளது. எனவே ராஜாபுரத்தில் ரேஷன் கடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சென்றாயகுமார், ராஜாபுரம்.
பஸ் நிலையத்தில் குடிமகன்கள் தொல்லை
திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு மதுபோதையில் வரும் குடிமகன்கள் பஸ் நிலைய நடைமேடைகளில் படுத்து தூங்கி விடுகின்றனர். அப்போது வாந்தி எடுப்பது, சிறுநீர் கழிப்பது என பயணிகள் முகம் சுழிக்கும் சம்பவங்களும் அரங்கேறுகிறது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கந்தசாமி, பழனி.
ஆக்கிரமிப்பின் பிடியில் சாலை
உத்தமபாளையம் தாலுகா கோம்பையில் உள்ள சாலைகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன. இதனால் சாலை சுருங்கி வருகிறது. இதன் காரணமாக அந்த சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அபினேஷ்வரன், கோம்பை.
சமுதாய கூடம் சீரமைக்கப்படுமா?
தேனி அல்லிநகரம் கக்கன்ஜி காலனியில் உள்ள சமுதாய கூடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் தங்கள் வீட்டு விசேஷ நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் தவிக்கின்றனர். எனவே சேதமடைந்த சமுதாய கூடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-லோகேஸ்வரன், அல்லிநகரம்.

மேலும் செய்திகள்