ஈட்டி மரம் கடத்திய 2 பேருக்கு ஒரு ஆண்டு சிறை

ஈட்டி மரம் கடத்திய 2 பேருக்கு ஒரு ஆண்டு சிறை

Update: 2021-09-17 15:25 GMT
பந்தலூர்

பந்தலூர் அருகே குந்தலாடியில் கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி பிதிர்காடு வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஈட்டி மரத்தை கடத்தி வந்த குந்தலாடியை சேர்ந்த தாமஸ் (வயது 42), உப்பட்டியை சேர்ந்த வர்க்கீஸ் (40) ஆகியோரை கைது செய்தனர். 

அவர்களிடம் இருந்து ஈட்டி மரமும் கடத்தப்பட்டது. இது குறித்த வழக்கு பந்தலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து தீர்ப்பு கூறப்பட்டது. 

அதன்படி குற்றம் சாட்டப்பட்ட 2 பேருக்கும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட்டு பிரகாஷ் தீர்ப்பு கூறினார். 

மேலும் செய்திகள்