மாணவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, பழனியில் மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-17 15:21 GMT
பழனி: 

இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் பழனி பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் செல்வமுருகன் தலைமை தாங்கினார். செயலாளர் முகேஷ் முன்னிலை வகித்தார். 

ஆர்ப்பாட்டத்தின்போது, மாணவர்களின் தற்கொலையை தடுக்க ‘நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்திற்கு ‘நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாணவர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்