பஸ்களை அடிக்கடி வழிமறிக்கும் காட்டு யானைகள்
மசினகுடி- மாயாறு சாலையில் பஸ்களை காட்டு யானைகள் அடிக் கடி வழிமறித்து வருகிறது. இதனால் பயணிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
கூடலூர்
மசினகுடி- மாயாறு சாலையில் பஸ்களை காட்டு யானைகள் அடிக் கடி வழிமறித்து வருகிறது. இதனால் பயணிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
காட்டு யானைகள்
கூடலூர், மசினகுடி பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதில் காட்டு யானைகள் அடிக்கடி கூடலூர் பகுதிகளில் ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அதுபோன்று மசினகுடி பகுதியில் சாலையில் செல்லும் வாகனங் களை காட்டு யானைகள் துரத்தி வருகிறது. கூடலூரில் இருந்து மசினகுடி வழியாக மாயாறுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களை காட்டு யானைகள் அடிக்கடி வழிமறிக்கும் சம்பவம் நடந்து வருகிறது.
பஸ்சை வழிமறித்தது
இந்த நிலையில் மசினகுடியில் இருந்து மாயாறு பகுதிக்கு பயணிகளுடன் அரசு பஸ் சென்றது. அப்போது திடீரென்று அங்கு வந்த காட்டு யானைகள் அந்த பஸ்சை வழிமறித்தது. இதனால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அத்துடன் அவர்கள் அனைவரும் சேர்ந்து கூச்சலிட்டு துரத்தினார் கள். இதையடுத்து அந்த காட்டு யானைகள் அங்கிருந்து வனப் பகுதிக்குள் சென்றது. இதனால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.
இது குறித்து பயணிகள் கூறியதாவது:-
தாக்க முயன்றது
மசினகுடியில் இருந்து மாயாருக்கு செல்லும் சாலையில் காட்டு யானைகள் எதிர்பாராதவிதமாக அடிக்கடி வருகிறது. கடந்த 2 தினங்களாக அரசு பஸ்சை வழிமறித்து தாக்க முயன்றது. இதனால் அச்சத்துடன் பயணம் செய்யும் நிலை காணப்படுகின்றது.
அந்த வழியாக சென்ற அரசு பஸ்சை ஒரு காட்டு யானை வழிமறித்து தாக்க முயன்றது. இதனால் டிரைவர் பஸ்சை பின்னோக்கி எடுக்க முயன்றார்.
அப்போது திடீரென்று பஸ் நின்றது. பின்னர் பயணிகள் அனைவரும் சேர்ந்து சத்தமிட்டதால் அந்த காட்டு யானை அங்கிருந்து சென்றது.
ரோந்து செல்ல வேண்டும்
இவ்வாறு இந்த சாலையில் அடிக்கடி காட்டு யானைகள் பஸ்சை வழிமறிப்பது வாடிக்கையாகிவிட்டது. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் அச்சத்துடனே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே வனத்துறையினர் இங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு சாலையை ஒட்டி நிற்கும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.