அனைத்துத் துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து பணிபுரிய வேண்டும். கலெக்டர் அவர் குஷ்வாஹா பேச்சு

உள்ளாட்சி தேர்தலில் அனைத்துத்துறை அலுவலர்கலும் ஒன்றிணைநஶ்து பணிபுரிய வேண்டும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா கேட்டுக்கொண்டார்.

Update: 2021-09-17 12:30 GMT
திருப்பத்தூர்

உள்ளாட்சி தேர்தலில் அனைத்துத்துறை அலுவலர்கலும் ஒன்றிணைநஶ்து பணிபுரிய வேண்டும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா கேட்டுக்கொண்டார்.

ஆய்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் அமர்ஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது. 
அப்போது கலெக்டர் பேசியதாவது:-

மாவட்டத்தில் 13 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 125 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 208 ஊராட்சி மன்ற தலைவர்கள், 1,779 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

ஒன்றிணைந்து

மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, வாக்குப்பதிவு எந்திரகள் வைக்கும் அறை மற்றும் வாக்குகள் எண்ணிக்கை, தேர்தல் குறித்த பயிற்சிகள், தேர்தலுக்கான வாக்கு செலுத்தும் சீட்டுகள், தபால் வாக்கு சீட்டுகள், தேர்தல் பார்வையாளர், தேர்தல் செலவினங்கள், போக்குவரத்து வசதி, செய்திகள் மற்றும் தகவல் பரிமாற்றம், தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் கொரோனா முன் தடுப்பு பணிகள் உள்ளிட்ட பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் அனைவரும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை சரியாக மேற்கொள்ள வேண்டும். 
அனைத்துத் துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணிபுரிய வேண்டும். நாம் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிவது மற்றும் கிருமிநாசினி, சோப்பு பயன்படுத்தி அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல் போன்ற கொரோனா முன்தடுப்பு பணிகளை அவசியம் பின்பற்றி தேர்தலை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணியன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில், அனைத்து தாசில்தார்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்