மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
மேட்டூர் அணை
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்தது. மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது. நேற்றுமுன்தினம் அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 750 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்து. அதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 16-ந் தேதி காலை அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 521 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது.
அதிகரிப்பு
அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 16 ஆயிரத்து 750 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரம் கன அடிக்கு மேல் அதிகரிக்குமானால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயர வாய்ப்பு உள்ளது.