அரசு கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு
பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சேலம் அரசு மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சேலம்:
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையே பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் சேலம் அரசு பெண்கள் கல்லூரி மாணவிகள் மல்யுத்தம், கைப்பந்து, யோகா உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பதக்கம் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி முதல்வர் ரமா பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சிவக்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.