அரசு கல்லூரி பேராசிரியர்கள்- பணியாளர்கள் நூதன ஆர்ப்பாட்டம்
அரசு கல்லூரி பேராசிரியர்கள்- பணியாளர்கள் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்:
குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக கவுரவ பேராசிரியர்கள்- விரிவுரையாளர்கள், அலுவலக பணியாளர்கள் தங்களுக்கு கடந்த 4 மாதங்களாக வழங்கப்படாத சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் நேற்று 3-வது நாளாக மதிய உணவு இடைவெளியின்போது கல்லூரியின் நுழைவு வாயிலின் முன்பு கோரிக்கை முழக்கத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் தங்களது கண்களில் கருப்பு துணி கட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, தங்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோஷத்தை எழுப்பினர்.