தொழில் அதிபர் கொலையில் 4 பேர் கைது

திருப்பாச்சேத்தி அருகே தொழில் அதிபர் கொலையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2021-09-17 00:57 IST
திருப்புவனம்,

திருப்பாச்சேத்தி போலீஸ் சரகத்தைச் சேர்ந்த வேம்பத்தூர் லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் அழகுமலை (வயது 55). தொழில் அதிபர். இவர் நேற்று முன்தினம் அவரது வீட்டு முன்பு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து அவரது மனைவி சுமதி திருப்பாச்சேத்தி போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஏழுமலை, லெட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர், ராஜா, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா டி.வேப்பங்குளத்தை சேர்ந்த சதீஷ்குமார், லெட்சுமிபுரத்தைச் சேர்ந்த முருகேசன், அவரது மனைவி சிவகாமி அம்மாள் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின்பேரில் மானாமதுரை துணை சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் தலைமையில் சென்ற போலீசார் தலைமறைவாக இருந்த சுந்தர் (31), ராஜா (36), சதீஷ்குமார் (23), முருகேசன் (70) ஆகிய 4 பேரை கைது செய்தனர். விசாரணை செய்து வருகின்றனர். இது குறித்து துணை சுந்தரமாணிக்கம் கூறும்போது உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் காரணமாக கொலை நடந்து உள்ளது என்றார்.

மேலும் செய்திகள்