முருகர் வேடமிட்டு வேட்பு மனு தாக்கல் செய்த வாலிபர்

முருகர் வேடமிட்டு வேட்பு மனு தாக்கல் செய்த வாலிபர்;

Update: 2021-09-16 18:21 GMT
ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் வருகிற அக்டோபர் மாதம் 6-ந்தேதி முதல் கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. நாட்டறம்பள்ளி தாலுகாவுக்கு உட்பட்ட மல்லப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட, நேற்று ஜோலார்பேட்டை அருகே ஆசிரியர்நகர் பகுதியில் உள்ள ஜோலார்பேட்டை ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் ெசய்ய, கையில் வேலுடன் முருக கடவுள் வேடமிட்ட 22 வயது வாலிபர் ஒருவர் வந்தார்.
அவர், தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ராஜேந்திரனிடம் முருக கடவுள் வேடத்திேலயே வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரை ஜோலார்பேட்டை ஒன்றிய அலுவலகத்தில் இருந்தவர்கள், பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனா்.

மேலும் செய்திகள்