திருநங்கைகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்
திருநங்கைகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்
காட்பாடி
காட்பாடி ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் காட்பாடி ரெயில் நிலையத்தில் திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அரக்கோணம் கோட்ட உதவி ஆணையர் ஏ.கே. ப்ரீத் தலைமை தாங்கி பேசுகையில், திருநங்கைகள் குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடாது. ரெயில்களிலும், ரெயில் நிலையத்திலும் பிச்சை எடுக்கக்கூடாது. படித்த திருநங்கைகள் இருந்தால் அவர்கள் அரசிடம் வேலைவாய்ப்புக்காக கோரிக்கை மனு கொடுக்கலாம், என்றார்.
கூட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ், பறக்கும்படை தனித் தாசில்தார் கோட்டீஸ்வரன் மற்றும் திருநங்கைகள் பலர் கலந்து கொண்டனர்.