கல்வராயன் மலையில் 1500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன் மலையில் 1500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு;

Update: 2021-09-16 17:33 GMT
கச்சிராயப்பாளையம்

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் உத்தரவின்பேரில் திருக்கோவிலூர் மதுவிலக்கு போலீசார் கல்வராயன் மலைப் பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஆவலூர் கிராமத்தில் கடுக்காய் மரத்து ஓடை என்ற இடத்தில் 3 பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகளில் 1,500 லிட்டர் சாராய‌ ஊறல் இருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை மண்ணில் கொட்டி அழித்தனர். மேலும் இது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்