திருப்பூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருப்பூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-09-16 16:42 GMT
திருப்பூர்,

திருப்பூர் வஞ்சிபாளையம் ஈஸ்வரன் காம்பவுண்டு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். பனியன் தொழிலாளி. இவரது மகள் மாலதி (வயது 26). இன்னும் திருமணம் ஆகவில்லை. பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். கடந்த 6 மாத காலமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மாலதி அதற்கான சிகிச்சை எடுத்து வந்ததாக தெரிகிறது. 

இந்நிலையில் சம்பவத்தன்று வயிற்று வலியால் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து உள்ளார். பெற்றோர் வெளியே சென்ற பிறகு வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீரபாண்டி போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்