வால்பாறை
வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் தீயணைப்பு நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக ஒருவர் சுற்றித்திரிந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அண்ணா நகரில் வசித்து வந்த மாற்றுத்திறனாளியான பாக்கியராஜ்(வயது 46) என்பதும், கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது.
அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 1¼ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.