50 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு

50 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு

Update: 2021-09-16 15:56 GMT
முத்தூர்:
 வெள்ளகோவில் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் முத்தூர் நகர, சுற்றுவட்டார கிராம பகுதிகளில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்கள் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா சின்னமுத்தூர் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு அரசு மருத்துவமனை டாக்டர்.நவீனா தலைமை தாங்கினார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார உதவியாளர் யோகபாரதி  கர்ப்பிணிகள் இயற்கை பாரம்பரிய சத்தான ஆரோக்கியமான உணவு முறைகளை மேற்கொள்ளும் வழிமுறைகள், யோகா, உடற்பயிற்சி செய்வதன் அவசியம், இயற்கை காய்கறிகள், பழங்களை சாப்பிடுவதன் அவசியம், ஊட்டச்சத்து மேலாண்மை கடைப்பிடித்தல், குழந்தை வளர்ப்பு, உடல், மன நலம் ஆரோக்கியம் மேம்படுத்துதல் ஆகியவை பற்றி கூறினார்.தொடர்ந்து விழாவில் முத்தூர் பகுதிகளை சேர்ந்த 50 கர்ப்பிணிகளுக்கு மஞ்சள், குங்குமம், தாலி சரடு, வெற்றிலை பாக்கு, வளையல், ஜாக்கெட் துணி அடங்கிய சமுதாய வளைகாப்பு சீர் தாம்பூல தட்டுகள் வழங்கப்பட்டன. முடிவில் கர்ப்பிணிகளுக்கு 5 வகையான கலவை சாதம் வழங்கப்பட்டது. விழாவில் சமுதாய சுகாதார செவிலியர் மல்லிகா, கிராம சுகாதார செவிலியர் ஈஸ்வரி மற்றும் அரசு மருத்துவமனை செவிலியர் குழுவினர், கிராம சுகாதார செவிலியர்கள், சுற்றுவட்டார அங்கன்வாடி மைய பொறுப்பாளர்கள், பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்