வீட்டுக்குள் புகுந்த அரிய வகை பாம்பு மீட்பு
வீட்டுக்குள் புகுந்த அரிய வகை பாம்பு மீட்பு
கோவை
கோவை சிங்காநல்லூர் வசந்த் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப் பில் தரைதளத்தில் இருக்கும் ஒரு வீட்டில் நேற்று முன்தினம் காலை பாம்பு ஒன்று புகுந்தது.
இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பாம்பு பிடிக்கும் தன்னார்வலர் சித்ரன் விரைந்து வந்தார்.
அப்போது வீட்டின் கழிவறைக்குள் பாம்பு நுழைந்தது. அதை அவர் லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். பின்னர் அந்த பாம்பு அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.
இதுகுறித்து சித்ரன் கூறும்போது, பிடிபட்டது 1½ அடி நீளமுள்ள காமன்பிரைடல் என்ற அலங்கார பாம்பு ஆகும்.
அதற்கு விஷம் கிடையாது. கட்டுவிரியன் பாம்பு போல் உடலில் அடுக்கடுக்காக மஞ்சள் நிறத்தில் வளையம் போன்று இருக்கும்.
இது பல்லி, சிறிய பூச்சிகளை உணவாக உட்கொள்ளும். ஆனால் கட்டுவிரியன் என்று கருதி சிலர் அடித்துக் கொன்று விடுகின்றனர்.
பாம்பு வந்தால் அடிக்காமல் வனத்துறைக்கு 0422 -2456922 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.