ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி சிக்கியது
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து சூளூர்பேட்டை செல்லும் மின்சார ரெயிலில் ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்த இருப்பதாக பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து வட்ட வழங்கல் அலுவலர் உமாசங்கரி ஆந்திரா செல்லும் சூளூர்பேட்டை மின்சார ரெயிலில் சோதனையிட்டார். அப்போது பயணிகள் அமரும் சீட்டின் கீழ் 38 மூட்டைகளில் 1 டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசி மூட்டைகளை வட்ட வழங்கல் அலுவலர் பறிமுதல் செய்து பொன்னேரி தாசில்தார் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார்.