முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 130 அடியாக குறைந்தது

மழைப்பொழிவு இல்லாததால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 130 அடியாக குறைந்தது.

Update: 2021-09-16 11:15 GMT
கூடலூர்:
தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெறுகிறது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 152 அடி ஆகும். இதில் 142 அடிவரை தண்ணீர் தேக்கி கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. கடந்த 1-ந்தேதிஅணையின் நீர்மட்டம் 132.55 அடியாக இருந்தது. 
அதன்பிறகு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு இல்லை. மேலும் தமிழகத்துக்கு அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. அதன்படி நேற்று அணையின் நீர்மட்டம் 130.85 அடியாக குறைந்தது. நீர்வரத்து வினாடிக்கு 907 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 1,300 கனஅடிவீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் 4ஆயிரத்து 896 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.

மேலும் செய்திகள்