கோவில்பட்டியில் கஞ்சா விற்ற 2பேர் கைது

கோவில்பட்டியில் கஞ்சா விற்ற 2பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-09-16 11:13 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம், மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சுப்பிரமணியபுரம் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த முத்துநகரைச் சேர்ந்த தங்கவேல் மகன் மாரிமுத்து (வயது 39), ஸ்டாலின் காலனியை சேர்ந்த கணேசன் மகன் வீரா ( 20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்