அச்சரப்பாக்கம் அருகே வாகனம் மோதி 2 பேர் பலி

அச்சரப்பாக்கம் அருகே வாகனம் மோதி 2 பேர் பலியானார்கள்.

Update: 2021-09-16 00:25 GMT
அச்சரப்பாக்கம்,

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் பெரியப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 40). சிறுமையிலூர் இரண்டு அடி கிராமத்தை சேர்ந்தவர் கலைவாணன் (40). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் அச்சரப்பாக்கம் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் பருக்கல் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தட்சிணாமூர்த்தி, கலைவாணன் இருவரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதுசம்பந்தமாக அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்