அரபிக்கடலில் தவித்த 11 மீனவர்கள் பத்திரமாக மீட்பு

அரபிக்கடலில் மீன்பிடிக்க சென்றபோது படகு பழுதானதால் நடுக்கடலில் சிக்கி தவித்த 11 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Update: 2021-09-15 21:39 GMT
மங்களூரு:

படகு பழுதாகி நின்றது

  கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் மல்பேயில் மீன்பிடி துறைமுகம் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மீன்பிடித்துறை முகத்தில் இருந்து அரபிக்கடலில் 11 மீனவர்கள் மீன் பிடிக்க ஒரு படகில் புறப்பட்டனர். 35 கடல் மைல் தொலைவுக்கு சென்று வலை விரித்து படகில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். 

அந்த சமயத்தில் காற்று பலமாக வீசியது. மேலும் படகில் உள்ள என்ஜின் பழுதாகி விட்டது. இதனால் படகில் 11 மீனவர்களும் திரும்ப முடியாமல் நடுக்கடலில் தவித்தனர்.

11 மீனவர்கள் மீட்பு

  இதையடு்த்து அவர்கள், தங்களது வயர்லெஸ் போன் மூலம் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு கடலோர காவல் படையினர் ரோந்து படகில் விரைந்து வந்தனர்.

  பின்னர் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களின் படகை, ரோந்து படகில் கட்டி கரைக்கு இழுத்து கொண்டு வந்து 11 மீனவர்களை பத்திரமாக மீட்டனர்.

மேலும் செய்திகள்