அனுமதியின்றிபட்டாசு தயாரித்த 3 பேர் கைது
வெம்பக்கோட்டை அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாயில்பட்டி
வெம்பக்கோட்டை அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பறிமுதல்
வெம்பக்கோட்டை ஒன்றியத்தை சேர்ந்த கிராமங்களில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு புகார் வந்ததன்பேரில் வெம்பக்கோட்டை சப்- இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையில் விஜயரெங்காபுரம், துரைச்சாமிபுரம், மீனாட்சிபுரம், வெற்றிலையூரணி, அரசரடி உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர்.
அப்போது வெற்றிலையூரணி வீட்டில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த ஜெயராணி(வயது 36) இவர் வீட்டில் 10 கிலோ கார்ட்டூன் வெடிகள், 20 கிலோ சரவெடிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதே ஊரைச் சேர்ந்த மகேஷ்குமார்(35) வீட்டில் 20 கிலோ சரவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது
மீனாட்சிபுரத்தில் வேல்முருகன்(43) வீட்டில் 10 கிலோ சரவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி கைது செய்தார்.