அம்முண்டியில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்
திருவலம் அருகே உள்ள அம்முண்டி ஊராட்சி தலைவர் பதவியை பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கீடு செய்ததை கண்டித்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவலம்
திருவலம் அருகே உள்ள அம்முண்டி ஊராட்சி தலைவர் பதவியை பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கீடு செய்ததை கண்டித்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கீடு
வேலூர் மாவட்டம், திருவலம் அருகே உள்ளது அம்முண்டி ஊராட்சி. நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் இந்த ஊராட்சி, பட்டியலின பெண் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2,045 வாக்காளர்களாக உள்ள அம்முண்டி ஊராட்சியில், பட்டியலின பெண்கள் வெறும் 2 பேர் மட்டுமே உள்ளனர். பட்டியலின ஆண் வாக்காளர் ஒருவர் உள்ளார். மீதியுள்ள 2,042 பேர் பொது வாக்காளர்கள். எனவே அம்முண்டி ஊராட்சியை பொதுப்பிரிவினருக்கு மாற்றி தரக்கோரி கடந்த 12-ந் தேதி அம்முண்டியில் உள்ள சந்தை மேடு பகுதியில் பொதுமக்கள் தர்ணா போராட்டம் செய்தனர்.
தர்ணா போராட்டம்
இந்தநிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படாததால், நேற்று அம்முண்டியில் இதே கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் மீண்டும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த திருவலம் போலீசார் பொதுமக்களிடம், இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுத்து வருவதாக சமாதானம் செய்தனர்.
இதனால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.