சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
பேரணாம்பட்டு
-
பேரணாம்பட்டு அருகே உள்ள கோட்டைச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ் என்கிற பாட்ஷா (வயது 23). சாராய வியாபாரியான இவர் மீது பேரணாம்பட்டு போலீஸ் நிலையம், குடியாத்தம் மது விலக்கு பிரிவு போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்த வழக்குகளில் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய ேலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டு செல்வகுமார், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் பிரகாஷ்ராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.