சங்கராபுரம் அருகே மினி லாரி மோதி என்ஜினீயர் பலி

சங்கராபுரம் அருகே மினி லாரி மோதி என்ஜினீயர் பலி திருமணமான 10 வது மாதத்தில் பரிதாபம்

Update: 2021-09-15 17:50 GMT

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் பன்னீர்செல்வம்(வயது 27) என்ஜினீயர். சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்த இவருக்கு திருமணமாகி 10 மாதம் ஆகிறது. நிஷாந்தினி(21) என்ற மனைவி உள்ளார்.  கொரோனா தடுப்பூசி போடுவதற்காக கடந்த 3 நாட்களுக்கு முன்பு சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு வந்த பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சங்கராபுரம் சென்று விட்டு பின்னர் அங்கிருந்து வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார். 

அ.பாண்டலம் அருகே வந்தபோது குளத்தூரில் இருந்து சங்கராபுரம் நோக்கி கியாஸ் சிலிண்டர்களை ஏற்றி வந்த மினி லாரி  பன்னீர்செல்வம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி பன்னீர்செல்வம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுகத்தலி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்