விவசாயியை தாக்கியவர் மீது வழக்கு

கிணத்துக்கடவு அருகே விவசாயியை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2021-09-15 17:15 GMT
கிணத்துக்கடவு,

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே பகவதிபாளையம் இளங்கோவன் வீதியை சேர்ந்த விவசாயி தங்கவேல்(வயது 76). அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று தங்கவேல் தனது தோட்டத்துக்கு செல்லும் பாதையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சின்னதுரை என்பவர் அவரை வழி மறித்தார். 

அவர்களுக்குள் ஏற்கனவே வழித்தட பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் தங்கவேலுவை அந்த பாதையில் செல்லக்கூடாது என்று சின்னதுரை தடுத்து தகராறில் ஈடுபட்டார். மேலும் அவரை கைகளால் தாக்கினார். இதில் காயம் அடைந்த தங்கவேல், பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்