கஞ்சா விற்ற வாலிபர் கைது
ஆறுமுகநேரியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி 1-வது கேட் பாண்டுரங்கன் தெருவை சேர்ந்த அம்மமுத்து மகன் கணேஷ் (வயது 20). இவர், ஆறுமுகநேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கஞ்சா விற்று வந்துள்ளார். நேற்று ஆறுமுகநேரி காமராஜபுரம் பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த அவரை போலீஸ் சப-இன்ஸ்பெக்டர் சதீஷ்நாராயணன் கைது செய்தார். அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.