ரூ.98 லட்சத்தை மனைவி பெயருக்கு மாற்றி மோசடி

ராமநாதபுரத்தில் ரூ.98 லட்சத்தை மனைவி பெயருக்கு மாற்றி மோசடி செய்த வங்கி மேலாளரை போலீசார் தேடுகிறார்கள்.

Update: 2021-09-14 18:57 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருபவர் வாஷிங்டன்.இவர் கடந்த மே மாதம் 5-ந்தேதி வங்கி கணக்கில் இருந்து ரூ.98 லட்சத்தை தூத்துக்குடியில் உள்ள தனது மனைவி மைக்கேல்ரதி என்பவரின் வங்கி கணக்கிற்கு எந்த ஒரு ஆணையும் இன்றி தன்னிச்சையாக பணப்பரிமாற்றம் செய்து வங்கிப் பணத்தை மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வங்கி முதுநிலை மேலாளர் விஸ்வஜித் குமார் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து வங்கி கிளை மேலாளர் வாஷிங்டனை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்