வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 6 பேர் கைது

வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-09-13 19:14 GMT
ஏர்வாடி:

திருக்குறுங்குடி வனச்சரகம் குழுக்கம்பாறை வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சுற்றித்திரிந்த 6 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், தூத்துக்குடியை சேர்ந்த சந்தானசெல்வன், அந்தோணி கிரன், சதீஷ்குமார், தாமஸ், சேவியோ மேதா, ராஜ்குமார் என்பதும், வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்