வழக்கு

332 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2021-09-12 20:06 GMT
வாடிப்பட்டி,
மாவட்ட தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவுப்படி தேசிய மக்கள் நீதிமன்றம் வாடிப்பட்டி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த நீதிமன்றத்தில் நீதிபதிகள் ராம்கணேஷ், அருண் ஆகியோர் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளை விசாரித்தனர். உரிமையியல் வழக்குகள் வாடகை பிரச்சினை, கொடுக்கல்-வாங்கல், குடும்ப பிரச்சினை உள்ளிட்ட 23 வழக்குகள் சமரசமாக பேசியும், குற்றவியல் வழக்குகளில் மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்கு, காசோலை மோசடி வழக்கு உள்பட 309 வழக்குகளை உடனடியாக விசாரணை செய்து அபராத தொகை விதித்தும் மொத்தம் 332 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் உரிமையியல் வழக்கில் ரூ.22 லட்சத்து 11 ஆயிரத்து 882 மற்றும் குற்றவியல் வழக்கில் ரூ.8 லட்சத்து 23 ஆயிரத்து 100 என ரூ. 30 லட்சத்து 34, 982 பெறப்பட்டது.

மேலும் செய்திகள்