முத்தூர்
ஈரோட்டில் இருந்து மதுரைக்கு இரும்பு பொருட்கள், சின்டெக்ஸ் தொட்டிகள் உட்பட பல்வேறு பார்சல் பொருட்கள் அடங்கிய பாரங்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி புறப்பட்டு வந்தது. இந்த லாரியை மதுரை மாவட்டம், சமயநல்லூர் பகுதியை சேர்ந்த சின்னையா தேவர் என்பவரது மகன் செல்வம் (வயது 35) என்ற டிரைவர் ஓட்டி வந்தார்.
இந்த லாரி திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர்- காங்கேயம் பிரதான சாலையில் கொக்குமடை விநாயகர் கோவில் அருகில் நேற்று நள்ளிரவு 1:30 மணிக்கு வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவரில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் செல்வம் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து காங்கேயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.