விநாயகர் சிலைகளை கிணற்றில் கரைத்த பொதுமக்கள்

ஓட்டப்பிடாரம் அருகே விநாயகர் சிலைகளை கிணற்றில் பொதுமக்கள் கரைத்தனர்.

Update: 2021-09-12 17:38 GMT
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முறம்பன் கிராமத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. விநாயகர் சிலைக்கு 3 நாட்கள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு இந்து மக்கள் கட்சி வடக்கு மாவட்ட தலைவர் பொன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். விநாயகர் சிலை ஊர்வலத்தை மாநில பொதுச்செயலாளர் ரவிகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். ஊர்வலம் ஊரின் முக்கிய வீதி வழியாக எடுத்து செல்லப்பட்டு கிராமம் அருகே உள்ள கிணற்றில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகி இசக்கிமுத்து, ஓட்டப்பிடாரம் ஒன்றிய தலைவர் பால்ராஜ், ஒன்றிய துணை தலைவர் முத்துகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி தனலவர் சுடலைமாடன், ஊர் நாட்டாண்மைகள் லட்சுமணன், சுரேஷ் உட்பட மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்