ஒரே நாளில் 1½ லட்சம் பேருக்கு தடுப்பூசி

ஒரே நாளில் 1½ லட்சம் பேருக்கு தடுப்பூசி

Update: 2021-09-12 17:25 GMT
கோவை, செப்.13-
தமிழகம் முழுவதும்  கொரோனா தடுப்பூசி மெகா முகாம் நடத்தப்பட்டது. அதன்படி, கோவை மாநகரில் 308 இடங்கள் உள்பட மாவட்டத்தில் 1475 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்   நடைபெற்றது. 

ஆனால் காலை 6 மணி முதலே தடுப்பூசி மையங்கள் முன்பு ஏராளமான பொதுமக்கள் குவிய தொடங்கினர். பின்னர் அவர்களின் பெயர், ஆதார்எண் போன்ற விபரம் பதிவு செய்யப்பட்ட பிறகு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

 முகாமை கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் ஆய்வு செய்தனர். மாவட்டத்தில் காலை 10 மணிக்குள் 35 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

இரவு 7 மணி வரை மொத்தம் 1 லட்சத்து 51 ஆயிரத்து 685 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. சென்னையில் 1.73 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டு மாநில அளவில் முதலிடத்தை பிடித்தது. 

அதற்கு அடுத்தப்படியாக கோவையில் 1.51 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டு 2-வது இடத்தை பிடித்து உள்ளது.

மேலும் செய்திகள்