திருத்தேரியில் ரூ.9¾ லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம்

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட திருத்தேரி கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 9 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது.

Update: 2021-09-09 06:53 GMT
இதற்கான திறப்பு விழா நடந்தது, இதற்கு கிளை செயலாளர் கே.பி.ராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் கே.ஆர்.சி.ஜெ.ரத்திஷ், கிளை செயலாளர் சண்முகம், டி.சி.ரவி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கார்த்திக், ஆகியோர் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். விழாவில் முன்னாள் வார்டு உறுப்பினர் பாஸ்கரன், கோவிந்தன், கலையரசன், சரத்குமார், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.


மேலும் செய்திகள்