துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 12-ந் தேதி புதுச்சேரி வருகை

புதுச்சேரிக்கு அடுத்த வாரம் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருகிறார்.

Update: 2021-09-09 06:09 GMT
புதுச்சேரி,

புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அரசு முறைப் பயணமாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருகை தருகிறார். புதுச்சேரிக்கு வரும் 12 ஆம் தேதி காலை வருகை தரும் வெங்கையா நாயுடு, 13 ஆம் தேதி பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இதையடுத்து 14 ஆம் தேதி வெங்கையா நாயுடு புதுச்சேரியில் இருந்து புறப்படுகிறார். துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டம் நடத்தி பாதுகாப்பு பணிகளை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளனர். அவரது பயணம் குறித்து அரசு தரப்பில் முறைப்படி விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்