நண்பர்களுடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி ஐ.டி.ஐ. மாணவர் பலி

எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் கரை ஒதுங்கியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் எண்ணூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Update: 2021-09-09 01:14 GMT
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்த வாலிபர் யார்? என விசாரணை நடத்தினர். அதில் பிணமாக மீட்கப்பட்ட வாலிபர், மீஞ்சூரை அடுத்த அரியவாயலைச் சேர்ந்த அப்துல் பாசித் (வயது 20) என்பதும், ஐ.டி.ஐ. படித்து வந்ததும் தெரிந்தது.

தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் மாலை எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரையில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி அப்துல் பாசித் பலியாகிவிட்டார். இரவு நேரத்தில் அவரது உடல் கரை ஒதுங்கி உள்ளது. அப்துல் பாசித், ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் பயந்துபோய் இதுபற்றி யாருக்கும் சொல்லாமலும், நண்பரை தேடாமலும் தப்பி ஓடிவிட்டது தெரியவந்தது.

மேலும் செய்திகள்