வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

ஊட்டி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தனர்.

Update: 2021-09-09 00:52 GMT
ஊட்டி

ஊட்டி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தனர்.

வளர்ச்சி பணிகள்

ஊட்டி நகராட்சி, ஊட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வேளாண் பொறியியல் துறை சார்பில் முடிக்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

ஊட்டி தலைகுந்தா பகுதியில் ரூ.7.36 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கம்பி வலையால் ஆன தடுப்புச்சுவர், ரூ.8.96 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட கம்பிவலை தடுப்புச்சுவர், கல்லட்டி முதல் தட்டனேரி சாலையில் நிலச்சரிவு பாதிப்பு ஏற்படாமல் இருக்க 5 இடங்களில் ரூ.34.61 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கம்பிவலை சுற்றுச்சுவர் ஆகியவற்றை கலெக்டர் ஆய்வு செய்தார். 

கலெக்டர் ஆய்வு

மேலும் உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட மாசிக்கல் பகுதியில் ரூ.7.50 லட்சம் செலவில் ஓடைக்கரை கம்பிவலை தடுப்புச்சுவர், தட்டனேரி சாலை பகுதியில் ரூ.7.57 லட்சம் செலவில் கம்பிவலை தடுப்புச்சுவர் ஆகிய பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். 

ஆய்வின்போது வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ஜெயபிரகாஷ், சிறப்புப் பகுதி மேம்பாட்டு திட்ட பொறியாளர் குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்