வடக்கன்குளம்:
நாகர்கோவிலை சேர்ந்த பிராங்கிளின் மகன் வினோத் (வயது 43). இவர், பழவூர் இருக்கன்துறை அருகில் தும்பு தொழிற்சாலை நடத்தி வருகிறார். அவரிடம் கூடங்குளத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் பொன் இசக்கி (36) என்பவரும் வேலை செய்து வருகிறார்.
வினோத் தொழிற்சாலையில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுக்க ரூ.21 ஆயிரத்து 500-ஐ தனது மேஜையில் வைத்துள்ளார். அதை பொன்இசக்கி திருடி உள்ளார். இதுகுறித்து வினோத் பழவூர் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார், அங்குள்ள கேமராக்களை ஆய்வு செய்தனர். பின்னர் பொன் இசக்கியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 10 திருட்டு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.