சேரன்மாதேவி:மூதாட்டியிடம் 6 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
மூதாட்டியிடம் 6 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
சேரன்மாதேவி:
வீரவநல்லூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் குருநாதன் மனைவி இசக்கியம்மாள் (வயது 70). இவர் நேற்று முன்தினம் இரவு வீரவநல்லூர்-அம்பை மெயின் ரோட்டில் கடையில் பால் வாங்கி விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர், கண் இமைக்கும் நேரத்தில் இசக்கியம்மாள் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபரை வலைவீசி தேடிவருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.