பிரண்டை செடிகள் கிலோ ரூ.3-க்கு விற்பனை
வெம்பக்கோட்டை ஒன்றிய பகுதிகளில் பிரண்டை செடிகள் கிலோ ரூ.3-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை ஒன்றியம் பூசாரி நாயக்கன்பட்டி, வெற்றிலையூரணி, பாறைப்பட்டி, கீழதாயில்பட்டி, அச்சங்குளம், கோட்டைப்பட்டி, காட்டுப்பகுதியில் பிரண்டை செடிகள் வளர்ந்து உள்ளன. இந்த செடிகளை தொழிலாளர்கள் சேகரித்து அதனை கிலோ ரூ.3-க்கு வியாபாரிகளிடம் விற்பனை செய்து ஊதியம் பெற்று வருகின்றனர். இந்த செடிகள் வறட்சியை தாங்கி வளரக்கூடியது ஆகும்.
காடுகளில் வேலி மீது படர்ந்து விளையக்கூடியது பிரண்டை செடி வேர் பகுதி, தண்டு பகுதி என அனைத்தும் மருந்தாக பயன்படுகிறது. ஆயுர்வேத மருந்து தயாரிக்கவும் இந்த செடிகள் பயன்படுகிறது. பெண்தொழிலாளர்கள் வேலை இல்லாத சமயங்களில் பிரண்டைசெடிகளை சேகரித்து விற்பனை செய்து கூடுதல் வருமானம் பெற்று வருகின்றனர்.